மீண்டும் 2 ஆயிரம், மளிகை பொருட்கள் .. திருச்சியில் அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்..

290
Spread the love

திருச்சி மாவட்டத்தில் 162.60 கோடி ரூபாய் செலவில் கொரானா இரண்டாம் தவணை நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய், திருச்சியில் உள்ள 1224 ரேஷன் கடைகள் மூலம் 8 லட்சத்து 13 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு, நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 180 பேருக்கும் இந்த உதவிகள் வழங்கினார். மேலும் சமூக நலத்துறை சார்பில் 175 பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது. இந்த விழாவில் எம்பிக்கள் திருநாவுக்கரசர், சிவா திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன்,மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்ஷா, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் பத்மகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு, மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.. 

LEAVE A REPLY