‘உடும்பு மை’ வசியமாம்.. வீடியோ போட்ட திருச்சி ஜோசியர் கைது

350
Spread the love

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சிச் சேர்ந்தவர் வீர பெரியசாமி (42). ஜோசியர் எனக்கூறிக்கொண்டு வலம் வந்த வீர பெரியசாமி சமீபகாலமாக உடம்பு வைத்து ஜோதிடம் மற்றும் வசியம் செய்வதாக கூறி வந்தார். அவரை பார்க்கவும் கூட்டம் கூட ஆரம்பித்தது. இந்த நிலையில் சமீபத்தில் யூடியூபில் உடம்பு ஜோதிடர வீர பெரியசாமி நாலரை நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிடிருந்தார். ‘எதிரிகளை ஸ்தம்பிக்க வைக்கும் உடும்பு வசிய மை’  என்கிற பெயரில் போடப்பட்டிருந்த வீடியோவில் வீர பெரியசாமி உடும்பு மூலம் வசியம் மை செய்வதாகவும், அதன் மூலம் எதிரிகளை எளிதில் வெல்ல முடியும், தொழில் வெற்றி பெறுவது போன்ற பல காரணங்களுக்கு உடும்பு மூலம் வசியம் செய்து தரப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

தமிழக அளவில் பரபரப்பான இந்த வீடியோவை ஆயிரக்ணக்கானோர் பார்த்து வந்தது தான் வேடிக்கை.. இச்சசம்பவம் தொடர்பாக  துவரங்குறிச்சி வன துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. நேற்று வனத்துறையினர்  வனவிலங்கு சட்டத்தின் கீழ் ஜோதிடர் வீர பெரியசாமியை கைது செய்தனர்.. உடும்பு எங்கே? என்று தெரியவில்லை.. 

LEAVE A REPLY