திருச்சி போலீசின் நடவடிக்கை.. ‘கட்டைய’ போட்ட அமைச்சர்?

668

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த மினிக்யூர் பகுதி ஆற்று ஓடைகளில் மணல் கொள்ளை தொடர்பாக நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் பெருமாள் மற்றும் திருப்பதி, சதாசிவம், ரவிசந்திரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்தே ஆளுங்கட்சி தரப்பில் இருந்தே பிரஷர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சிறைக்கு கொண்டு செல்லக்கூடாது என பக்கத்து தொகுதி அமைச்சர் ஒருவரின் உத்தரவாம். இதன் காரணமாகவே மாஜிஸ்திரேட்டில் வீட்டில் ஆஜர்படுத்திய 9 பேருக்கும் கொரோனா உள்ளிட்ட எல்லா டெஸ்ட்டுகளும் எடுகக வேண்டும் எனக்கூறி ரையும் மணப்பாறை ஜிஎச்சுக்கு கொண்டு வந்த போலீசார் அங்கு அட்மிசன் போட்டுள்ளனர். இன்று ஞாயிறு கிழமை என்பதால் ஆஸ்பத்திரியில் வைத்து நாளை ஜாமீன் பெட்டிசன் போட்டு வெளியில் எடுத்துக்கொள்ளலாம் என்பது அமைச்சரின் ஐடியாவாம். தொடர்ந்து மணல் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதிலும் அமைச்சர் குறுக்கிடுகிறாரே? என  புலம்புகின்றனர் போலீசார்.  

LEAVE A REPLY