திருச்சி போலீசில் ‘ரேஸ்’ புதுப்பிரிவு… டிஐஜி துவக்கி வைக்கிறார்

897
Spread the love

திருச்சி மாவட்டத்தில் உள்ள 30 சட்டம் – ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குள் எந்த ஒரு பிரச்சினை என பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்வதற்காக சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ரேஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு குழுவில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் 3 காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருப்பார்கள். 

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுக்கு உதவுவதே இந்த ரேஸ் குழுவினரின் பணியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேஸ் என்பதன் விாிவாக்கம் RACE – Rapid Action for Community Emergency ஆகும். திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் துவக்கப்படும் ரேஸ் குழு செயல்பாட்டினை நாளை திருச்சி டிஐஜி ஆனி விஜயா துவக்கி வைக்கிறார். 

LEAVE A REPLY