திருச்சி திமுக… 3 ஆக பிரிக்கப்படுகிறது

1248
Spread the love

திமுகவில் டெல்டா மாவட்டங்களின் சீனியர் மாவட்ட செயலாளராக இருந்த திருச்சியைச் சேர்ந்த கேஎன் நேருவிற்கு முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்ட செயலாளர் யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. திருச்சி திமுக தற்போது வடக்கு மற்றும் தெற்கு என உள்ளது. தெற்கு மாவட்ட செயலாளர் தான் நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளார். தற்போது நேரு மாநிலப்பொறுப்பிற்கு செல்வதால் அவருக்கு  பிறகு யார் மாவட்ட செயலாளராக வந்தாலும் சமாளிக்க முடியாது என்பதால் திருச்சி திமுக 3 ஆக பிரிககப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற ரீதியில் திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளும் 3 ஆக பிரிக்கப்பட்டுகின்றன. இதன்படி திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஒரு மாவட்ட செயலாளருக்கும், திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி ஆகியவை ஒரு மா.செவுக்கும், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகியவை ஒரு மா.செவுக்கும் ஒதுக்கப்படலாம். இல்லையெனில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஒரு மா.செவுக்கும், திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், லால்குடி ஒரு மா.செவுக்கும். மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஒரு மா.செவுக்கும் என பிரிக்கப்படுகிறது. இவ்வாறாக திருச்சி திமுக 3 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகி விட்ட நிலையில் அவை எந்தெந்த மாவட்டங்கள் என்பது அடுத்தடுத்த நாட்களில் தான் தெரியவரும்.. 

LEAVE A REPLY