Spread the love

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநில தலைவா் புலியூா் நாகராஜன் இன்று காலமானார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். 64 வயதை கடந்த புலியூர் நாகராஜன் பல ஆண்டுகளாக திருச்சி விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியவர். மேலும் வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பல்வேறு விவசாய பிரச்சினைகளுக்காக மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்து அதில் தீர்வு காணுவதில் வல்லவர். இவரின் மறைவு திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு பெரும் இழப்பே. அவரின் மறைவுக்கு இ-தமிழ் நியூஸ் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.

LEAVE A REPLY