விஜயபாஸ்கர் தொடர்ச்சி.. திருச்சி ரைஸ் மில் ஓனர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு…

467
Spread the love

முன்னாள் அமைச்சர் ஹெல்த் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 6 மாவட்டங்களில் உள்ள 43 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் அடுத்த ராமச்சந்திரன் நகர் எஸ்ஏஎஸ் அபார்ட்மெண்டில் வசிக்கும்  விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் வீட்டிலும், திருச்சி கிராப்பட்டி காந்தி நகர் முதல் தெருவில் வசிக்கும் விஜயபாஸ்கரின் பினாமி குருபாபு என்கிற ராஜமன்னாரின்  வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக உதயகுமாரின் வீடு பூட்டியிருந்தது. சாவியை எடுத்து வர 

சொல்லிய விஜிலன்ஸ் போலீசார் அதனை திறந்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல்வேறு ஆவணங்களும் 1 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் குருபாபு வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில்இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் பாப்பா காலனியில் சிவா ரைஸ்மில் நடத்தி வரும் சுதாகார் என்பவர் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..

LEAVE A REPLY