சிலிண்டர் வெடித்ததில் திருச்சி இன்ஜினியர் பலி…

171
Spread the love

திருச்சி, திருவெறும்பூர் குடகுமலை என்ஜிஓ காலனி 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் செந்தில்குமார் (44). இவர் வெளிநாட்டில் கெமிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்த இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல், இங்கேயே இருந்துள்ளார். இவருக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மனைவியும் கடந்தாண்டு பிரிந்து சென்று விட்டாராம். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில்,நேற்றிரவு இரவு தந்தை கலியமூர்த்தியும் வெளியே சென்ற நிலையில் செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் செந்தில்குமார் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார் செந்தில்குமார் இறப்புக்கு காரணம் விபத்தா? தற்கொலையா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. 

LEAVE A REPLY