திருச்சி ஒத்தக்கடையில் தீ விபத்து.. கடைகள் எரிந்து சாம்பல்..

2187
Spread the love

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பாரதிதாசன் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் அருகே, லியோ ஆட்டோ அசசரீஸ் என்கின்ற பெயரில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு புதிய உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் உள்ளது. இதனை லியோ என்பவர் நிர்வகித்து வருகிறார், இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது நிறுவனத்தை பூட்டி விட்டுச் சென்ற நிலையில், இன்று காலை 5.30 மணியளவில், கடையிலிருந்து தீபுகை வெளி வருவதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  

இதனிடையே தீ மளமளவென பரவி அருகே உள்ள சந்தோஷி Car Care, டபுள் ஸ்டைன் என்ற பேக்கரி நிறுவனத்திற்கும் பரவியது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர்  தீயணைப்பு அலுவலர் அனுசியா தலைமையில் தீயை அணைக்க போராடினர்.. அதற்குள்ளாக லியோ ஆட்டோ அசசரீஸ் கடை முழுவதும் எரிந்த சாம்பலானது. மேலும் அருகே உள்ள கார் கார் நிறுவனம், பேக்கரி உள்ளிட்ட இரண்டு கடைகளிலும் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்திற்கு லியோ ஆட்டோ அசசரீஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது..  திருச்சியின் மத்தியப்பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை ஏற்பட்டது.. 

 

LEAVE A REPLY