திருச்சியில் மீன் வாங்க கூடிய கூட்டம்.. கலெக்டர் உத்தரவு காத்துல போச்சு..

393
Spread the love

கொரோனா பரவல் காரணமாக திருச்சி உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டை மூட உத்தரவிட்ட திருச்சி மாவட்டக்கலெக்டர் சிவராசு அதனை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும் அங்கு மொத்த விற்பனை மட்டும் செய்ய வேண்டும் என்றும், சில்லறை விற்பனைக்கு இடம் கொடுக்க கூடாது எனவும் கூறியிருந்தார்.  கலெக்டர் உத்தரவு காற்றில் போச்சு என்பது போல் இன்று காலை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முண்டியடித்துக்கொண்டு மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

சில்லறையில் விற்பனை செய்யக் கூடாது என்று தடை இருந்தும் மொத்த வியாபாரிகள் அதைப் பற்றி கவலைப்படாமல் சில்லரை விற்பனையை அமோகமாக செய்தனர்.  அதேபோல் ரோசன் மஹால் சாலை வழியாக மிளகுபாறை செல்லும் சாலையிலும் மீன்களை வெட்டி வாங்கிச் செல்ல ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்டுக்கொள்ளவில்லை.. 

LEAVE A REPLY