திருச்சியில் ஞானவேல் முருகன் ரதயாத்திரை.. பக்தர்கள் பரவசம்

161
Spread the love

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள பாறைப்பட்டி, மாலைக்காட்டுப்பட்டி, மெய்யம்பட்டி, இடையப்பட்டி உள்ளிட்ட 18 கிராம பொதுமக்கள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 30 ம் ஆண்டு தமிழ் கடவுள் ஞானவேல் முருகன் ரதயாத்திரை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் இந்த ரதயாத்திரையில் ஞானவேல் முருகன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பாறைப்பட்டியில் இருந்து துவங்கிய ரதயாத்திரை மாலைக்காட்டுப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி வழியாக சென்ற ரதயாத்திரை புத்தாநத்தம் தெற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து கரகாட்டம், தேவராட்டம், தப்பாட்டம் என பல்வேறு இசை கச்சேரியுடன் இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ரத்தயாத்திரையானது புத்தாநத்தம் கடைவீதி வழியாக வடக்கு இடையப்பட்டியில் இருக்கும் ஞானவேல் மலைக்கு கொண்டுசென்று முருகனுக்கு அலங்கார சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கிரிவலமும் நடைபெற்றது. ரத்தயாத்திரையின்போது வழிநெடுக பல்வேறு கிராம மக்கள் முருகனுக்கு தேங்காய் உடைத்தும், மலர் தூவியும் வழிபட்டனர்.

மேலும் இந்த ஞானவேல் முருகன் ரத்தயாத்திரையில் மணப்பாறை, துவரங்குறிச்சி, பாலகுருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ரதயாத்திரை செல்லும் வழியே மாற்று மதத்தினரின் வழிபாட்டு தளங்கள் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹக் தலைமையில் 500 கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY