Spread the love

திருச்சி அரசு ஆஸ்பத்திரியல் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஆஸ்பத்திரியில் கடந்த வாரம்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு வந்தார். அவரது வருகையொட்டி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் முன்புறம் பொதுமக்களுக்கு உதவும் வகையிலான உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் அங்கு உதவி மையம் அங்கு இல்லை. இது தொடர்பாக etamilnews.com-ல் ”முதல்வருக்காக செட்டிங்கா” என்கிற தலைப்பில் செய்தி வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 3 இடங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தி வருவதால் இந்த உதவி மையங்கள் பெரும் உதவியாக இருப்பதாக பொதுமக்களால் கூறப்படுகிறது.

LEAVE A REPLY