20 டன் ஆக்சிஜன் ரெடி.. முன்கூட்டியே சுதாரித்த திருச்சி அதிகாரிகள்..

240
Spread the love

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற  ஒரு நிலை ஏற்பட்டால் சமாளிக்க வேண்டும் என்பதற்காக ஆக்சிஜன் டேங்கர் அமைக்க வேண்டும் என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அரசுக்கு கேட்டிருந்தார். அதன்படி அரசு நிதி ஒதுக்கீட்டில் ராட்சத ஆக்சிஜன் டேங்கர் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியில் இருந்து இந்த ஆக்சிஜன் டேங்கர் பயன்பாட்டில் உள்ளது. 20 டன் கொள்ளளவு கொண்ட இந்த டேங்கருக்கு, துவாக்குடியில் இருந்து டேங்கர் லாரிகளில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு

நிரப்பப்படுகிறது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில், இந்த டேங்கரில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 டன் ஆக்சிஜன் செலவிடப்படுகிறது. இதனால் 600 நோயாளிகளுக்கு உயிர்காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் இந்த டேங்கரில் இருந்து அதிகளவு ஆக்சிஜன் நோயாளிகளுக்கு செலவிடப்படுகிறது. தற்போது பயிற்சி செவிலியர் தங்கும் விடுதியும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த வார்டுக்கும் இந்த டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்படும். 

LEAVE A REPLY