திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கை; திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி, அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில், 2019 -ஆவது கல்வியாண்டில், கலந்தாய்வு மூலம் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமும், நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 2 ஆண்டு பயிற்சிகளான, மகளிருக்கான கம்மியர் மின்னணுவியல் (என்சிவிடி) மற்றும் ஆண் மற்றும் பெண்களுக்கான இயந்திர வேலையாள் (மெஷினிஸ்ட் – எஸ்டிவிடி) இரண்டு ஆண்டுகள் பயிற்சியும், ஓராண்டு பயிற்சிகளான கம்ப்யூட்டர் இயக்கல் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், துணி வெட்டுதல் மற்றும் தையல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சிக் கட்டணம் கிடையாது.
மேலும் கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.500, கட்டணமில்லா பேருந்து, விலையில்லா மிதிவண்டி, மடிக் கணினி, பாடப்புத்தகங்கள் வரைபடக் கருவிகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவையும், பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு : 0431 – 241300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .

LEAVE A REPLY