வீட்டில் இருந்த இளம் பெண் மாயம்… திருச்சியில் புகார்…

58
Spread the love

திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் முத்து (52). இவரது மனைவி ஜெயலட்சுமி(45). இந்நிலையில் இவர்களின் உறவினரான வெள்ளைசாமி என்பவரின் மகள் திருமண சீர்வரிசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர் பின்னர் மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இவர்களின் மூத்த மகள் பூஞ்ஜோதி (19) வீட்டில் இல்லை. மகளின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் எங்கு தேடியும் பூஞ்ஜோதி கிடைக்கவில்லை. இதுகுறித்து இப்பெண்ணின் தாய் ஜெயலட்சுமி திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண் பூஞ்ஜோதியை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY