திருச்சியில் நாளை முதல் தடுப்பூசி போடப்படும் இடங்கள்…..

4059
Spread the love

திருச்சி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வரப்பெற்றதை தொடர்ந்து 18 வயது முதல் 44 வயதுடைய நபர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி திருச்சி மாநகராட்சியின் 4 கோட்ட அலுவலகங்களிலும், 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரக பகுதிகளிலும் 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாளை(12ம் தேதி) முதல் காலை 10 மணி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்

தடுப்பூசி போடப்படும் இடங்கள்:

திருச்சி பொன்மலை, அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகங்கள்.

நவல்பட்டு, இனாம்குளத்துார், குழுமணி, சிறுகாம்பூர், புதுார் உத்தமனுார், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்துார், மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்துார், உப்பிலியபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள். 

LEAVE A REPLY