கொட்டும் மழை… 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

145
Spread the love
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு பெய்யலாம். இதனால், இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY