உய்யகொண்டானில் உயர்மட்ட பாலம்.. அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

245
Spread the love

திருச்சியில் மழையினால் பாதிக்கப்பட்ட திருச்சி, வயலூர் ரோட்டில் உள்ள ஆதி நகரின் வழியாகச் செல்லும் உய்யக்கொண்டான் ஆற்றில் நீர்செல்லும் அளவினையும், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தினையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு இன்று பார்வையிட்டார். ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கும்  இடங்களிலிருந்து நீரைவௌியேற்றும் பணியினை மாநகராட்சியினர் வௌியேற்றி வருகி்ன்றனர். ஆற்றின் கரைகளில் உள்ள செடிகளை அகற்றி, தூர்வாரிடவும், உயரம் குறைவாகவும், பழுதடைந்தும் உள்ள ஆற்றின் குறுக்குப் பாலத்திற்குப் பதிலாக புதிதாக உயர்மட்டப் பாலம் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர்  முஜிபுர் ரகுமான், எம்எல்ஏக்கள் எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், திமுக மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY