திருச்சியில் கோஷ்டி மோதல்… மறியல் போலீஸ் குவிப்பு..

428
Spread the love

திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே நேற்று மாலை சவ ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில்  மற்றொரு சவ ஊர்வலம் அதே வழியாக வந்தது. அப்போது இரு ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு இடையே திடீ ரென வாக்குவாதம் ஏற்பட் டது. திடீரென இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனர்.  இதன் எதிரொலியாக காந்தி மார்க்கெட் பகுதியில் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காந்தி மார்க்கெட் போலீசார் இன்ஸ்பெக்டர் மணிவண் ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது முறைப்படி புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. நேற்றிரவு முதல் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. 

LEAVE A REPLY