திருச்சியில் மண்பானைகள் ரெடி….

98
Spread the love

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் மன்னராட்சி காலம் முதல் காலம் வரை மண் பானை மண் சட்டிகளில் சமைத்து உண்ணுவது தொன்று தொட்டாக இருந்து வந்தது. ஆனால் தற்போது உள்ள நிலைமை மக்கள் நவீன உபகரணங்கள் அறிமுகத்தால் மண்பாண்டங்களை பொதுமக்கள் தவிர்த்து வருவது வேதனையும் அளிக்கிறது. இருப்பினும் நவீன இயந்திரங்கள் வந்திருந்தாலும் மண் பானைகளுக்கு இயற்கையாகவே ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. மூலம் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மக்களின் உடல் நலத்தை பாதிக்கும். ஆனால் மண்பாண்டங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் பாதுகாக்கப்பட்டு மனித உடலுக்கு புத்துணர்வை தரும் விதமாக இன்றும் உள்ளது. ஆனால் பொதுமக்கள் மண்பாண்டங்களை தவிர்த்து நவீன ரக இயந்திரங்கள் மீது மோகம் அதிகரித்து

உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. முன்னொரு காலத்தில் தாங்களாகவே தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வந்தனர். ஆனால் இப்போது யாரோ ஒருவர் தயாரித்து விற்பனை செய்யும் விதமாக உள்ளது. இதில் திருச்சி மாந்துறை பகுதியில் ஒரு மண்பாண்ட வியாபாரி கூறியதாவது…… பரம்பரை பரம்பரையாக எங்கள் சமூகத்தினர் மண்பாண்ட தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பல இன்னல்களை கடந்து நாங்கள் தொழில் நடத்தி வருகிறோம். மண் பாண்டங்கள் தொழில் நலிவடைந்து விட்டது கடந்த ஆண்டு 200 ரூபாய்க்கு விற்ற மண்பானைகள் இந்த ஆண்டு மணல் விலை ஏறி உள்ளதால் பானைகளை 250க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் மண்பாண்ட தொழில் நலிவடைந்து பிற மாவட்டங்களில் இருந்து நாங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் நவீன காலத்திற்கு மாறியதால் மண்பானைகளில் தண்ணீர் பிடிக்க ஏதுவாக குழாய் அமைத்து தர வேண்டி உள்ளது. அதனை பொருத்தி பானைகள் 300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. வருடாவருடம் மண்பாண்டங்கள் விற்பனை குறைந்து கொண்டே உள்ளது தவிர அதிகமானதாக இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

LEAVE A REPLY