காந்திமார்கெட் நாளை திறப்பு… அமைச்சருக்கு நன்றி தெரிவித்த நிர்வாகிகள்..

641
Spread the love

திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பதற்கான இடைக்கால தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் முன்பு திரண்ட வியாபாரிகள் பட்டாசுகள் வெடித்தும், வாணவேடிக்கைகள் வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலுவிற்கும் மாலை அணிவித்தார்.அப்போது வியாபாரிகளுக்கு உதவிய அமைச்சர் வெல்லமண்டிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது காலை தொட்டு  கோவிந்தராஜ் நன்றி தெரிவித்தார். அப்போது வியாபாரிகள் உற்சாக கோஷம் எழுப்பினர். இதுகுறித்து கோவிந்தராஜுலு கூறும் பொழுது…. நாளை காலை 9 மணிக்கு காந்தி மார்க்கெட் திறப்பு விழா நடைபெறும். இந்த திறப்பு விழாவிற்கு அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரை அழைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY