படகு சவாரிக்கு தயாராகும்… திருச்சி மாவடிகுளம்..

342
Spread the love

திருச்சியை அடுத்த பொன்மலைப்பட்டியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 147 ஏக்கர் பரப்பளவில் மாவடிகுளம் உள்ளது. இந்தக் குளம் மாநகராட்சி பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய குளம் ஆகும். அண்மையில் இந்த குளத்தில் பொதுப்பணித் துறை சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் குளத்தை தூர்வாருதல், குளத்தை சுற்றி நடை பாதை அமைத்தல் உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வந்தன.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குளம் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் இந்த குளத்தை சுற்றுலா தளம் ஆக்கி படகு சவாரி விட வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. தற்போது மாவட்ட நிர்வாகம் படகு சவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் படகுகள் மாவடி குளத்திற்கு வந்துள்ளன.. 

LEAVE A REPLY