அமைச்சர்களும் ஒதுங்கிக்கலாமா?… திருச்சி பொதுமக்கள் கேள்வி

603
Spread the love

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு சட்டம் ஆகியவை பொதுமக்களை முடக்கி போட்டுள்ளன. இதன் காரணமாக தினக்கூலிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் அவர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் மாவட்ட கலெக்டர்களும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் திருச்சி மாவட்ட அமைச்சர்கள் 2 பேரும்  தலை காட்ட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டக்கலெக்டர் சிவராசு மட்டுமே தொடர்ந்து மேற்பார்வை பணியினை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் எங்கேயும் வந்ததாக தெரியவில்லை என்கின்றனர் மாவட்ட அதிகாரிகள். அமைச்சர் நடராஜன் இருதய நோயாளி அவர் யோசிப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அமைச்சர் வளர்மதி எதையும் கண்டுக்கொள்ளாதது தான் வேதனை என்கின்றனர் அதிகாரிகள்.. 

LEAVE A REPLY