ரயில்வே பாலம் விவகாரம்.. திருச்சி எம்பி மத்திய அமைச்சருடன் சந்திப்பு..

137
Spread the love

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் குறுகிய வழியை கொண்டிருப்பதால் அங்கே புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2014ம் ஆண்டு தொடங்கியது. 81 கோடி திட்ட மதிப்பீட்டுடன் பாலப்பணிகள் நடைபெற்றன. அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து கருமண்டபம், கிராப்பட்டி, மன்னார்புரம், ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது.  ஆனால் மன்னார்புரம் செல்லும் பாலம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. இதற்கு காரணம் அந்த பாலம் செல்லும் பழியில் ராணுவ இடம் அமைந்துள்ளதால் நிலம் பெறுவதில்

சிக்கல் நீடித்தது. தற்போது அந்த நிலத்திற்கு பதிலாக தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான உத்தரவு இன்னும் பாதுகாப்பு துறையிடம் இருந்து வரவில்லை. பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்திற்கு பதிலாக 0.6 ஏக்கர் தமிழ்நாடு காவல்துறை நிலத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற உத்தரவில் விரைந்து கையெழுத்திட வேண்டும் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து வலியுறுத்தினார். அதற்கான வேண்டுகோள் கடிதத்தையும் அவர் அப்போது கொடுத்தார். 

LEAVE A REPLY