திருச்சி வாலிபர் கொலை… 8 பேர் கைது…

273
Spread the love

திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள ஏகிரி மங்கலத்தை சேர்ந்தவர் இளையராஜா. சாத்தனூரை சேர்ந்தவர் தர்மா என்ற தர்மராஜ் 2 பேரும் நண்பர்கள். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவின் மனைவியிடம் அடிக்கடி பேசி வந்த  தர்மராஜை இளையராஜா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் விலக்கிவிட சென்ற இளையராஜாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முகிலரசனை தர்மராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தர்மராஜ், சுந்தரம் பாக்யராஜ், அன்பு, சக்திவேல், குணா, வேலு, அண்ணாதுரை ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY