அடித்து விரட்டியது திருச்சி போலீசா? .. இரவு நேரத்தில் பரபரப்பு

1127
Spread the love

லாக்டவுன் காரணமாக திருச்சி நகரில் பஸ் ஸ்டாண்ட் , ரயில்வே ஜங்ஷன் பகுதிகளில் யாரும் இருக்க கூடாது என்பதால் வீடு இல்லாத நபர்கள் பல்வேறு இடங்களில் தங்கியிருக்கின்றனர். அந்த வகையில் திருச்சி  ஆர் ஆர் சபா உள்ளிட்ட இடங்களில் பலர் தங்கி வருகின்றனர். அவ்வாறு இன்று இரவு ஆர் ஆர் சபா பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் படுத்திருந்தனர். 9 மணியளவில் அங்கு போலீஸ் உடையில் வந்த நபர் ஓருவர் திடீரென அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் என சகட்டுமேனிக்கு தான் வைத்திருந்த லத்தியால் அடித்து விரட்டினார். இதனால் அங்கிருந்த நபர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.இந்த சம்பவத்தில் அங்கு தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர்.

 இதனால் ஏற்பட்ட சத்தத்தால் அந்தப்பகுதியில் இருந்த இளைஞர்கள் ஓடி வந்தனர். அதற்குள்ளாக காக்கி உடை போட்டிருந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இது குறித்து வாலிபர் ஓருவர் கூறுகையில் திடீரென படுத்திருந்தவர்களை அடித்தவர் போலீசாக தான் இருக்க வேண்டும். போதையில் இருந்த அவர் என்ன காரண த்திற்காக அடித்தார்என்பது தெரியவில்லை. இதனால் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நபர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.  

LEAVE A REPLY