செல்போனால் விபரீதம்.. திருச்சியில் 9 வயது சிறுமி கொலை.. 14வயது சிறுவன் கைது

897
Spread the love

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் மேல்பாகத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜங்கம். இவரது மனைவி லலிதா இவர்களின் 3வது மகள் கிர்த்திகா(9). இவர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டின் அருகே உள்ள நாகராஜ் என்பரின் மல்லிகை பூ தோட்டத்தில் கிர்த்திகா ரத்த வெள்ளத்துடன் கிடந்தார். சிகிச்சைக்காக கிர்த்திகாவை அக்கம்பக்கத்தினர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மண்டை ஓடு உடையும் வகையில் கிர்த்திகாவின் தலையின் பின்புறம் கல்லால் பலமாக தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கிர்த்திகா இறந்தார். இந்தச சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு மோப்பநா் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடி சென்ற நாய் அங்கிருந்த புளிய மரத்தின் அருகில் சென்று நின்று கொண்டது. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரத்தக்கறை படிந்த சட்டை, பேண்ட் ஆகியவற்றை வைத்து கிரித்திகாவின் அண்ணன் முறையில் உள்ள 14 வயது சிறுவனை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் மூலம் தவறான படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்து பழகி சிறுவன், சம்பவத்தன்று சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளான். இதனால் கோபடைந்த சிறுமி சத்தம்போட்டதுடன் கல்லை எடுத்து சிறுவனை அடித்துள்ளார். பயந்து போன சிறுவன் பெரிய கல் ஒன்றை எடுத்து சிறுமியின் பின் தலையில் பலமாக பல முறை அடித்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் மீது போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார்  இன்று மாலை சிறுவனை கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 

LEAVE A REPLY