போலீசாருக்கு 1மாதமாக இருந்த பயிற்சி .. 6 மாதமானது..

82
Spread the love

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கொரோனா காரணமாக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் சுருக்கப்பட்ட ஒரு மாத பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள காரணத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் 6 மாத கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை கண்டோன்மெண்ட் மைதானத்தில் 522 காவலர்களுக்கும், சுப்ரமணியபுரம் மைதானத்தில் 157 காவலர்களுக்கும், நவல்பட்டு மைதானத்தில் 287 பெண் காவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 6 மாத கால அடிப்படை பயிற்சி முடிவுற்ற பின் ஒரு மாத கால நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.

LEAVE A REPLY