திருச்சி போலீசை தள்ளி விட்டு ஓட்டம் பிடித்த வாலிபர்…

220
Spread the love

மாஸ்க் பைன் கட்டாமல் டிமிக்கி காட்டியவர் மீது வழக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வயலூர் சாலையில் உள்ள செக்போஸ்டில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அவர்கள் அபராதம் விதித்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த சிவா(30) என்பவர் மாஸ்க் அணியாமல் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அபராதம் விதித்து அதற்கான தொகையை கேட்டபொழுது அவர் போலீசாரை தள்ளிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். இதுகுறித்து எஸ்ஐ கீதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

செல்போன் திருடியவருக்கு சிறை… கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர்(31) என்பவர் தனது லோடு வேனை காந்தி மார்க்கெட் பகுதியில் நிறுத்தி இருந்தார். லாரியில் இருந்த மூட்டைகள் இறக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் அவர் டீ குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது பாலக்கரை எடத் தெருவை சேர்ந்த டேவிட்(20) என்பவர் வேனில் வைக்கப்பட்டிருந்த ராமரின் செல்போனை திருடி ஓட முயற்சித்துள்ளார். இதனை கவனித்த ராமர் அவரை விரட்டிச் சென்று பிடித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்றவர்களுக்கு சிறை…. திருச்சி திருவானைக்காவல் கும்பகோணம் சாலை பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த திருவனைக்காவல் திருமுல்லைராய சமுத்திரத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்கிற இருட்டு தினேஷ்(25) மணி என்கிற மணிகண்டன்(25) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY