ஆங்கிலத்தை தவிர்க்க வழி செய்யுமா?.. திருச்சி பிஆர்ஓ அலுவலகம்….

270
Spread the love

தமிழக அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்கிற உத்தரவின் அடிப்படையில் கிட்டத்தட்ட அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் தான் வெளியாகின்றன. காவல்துறையின் உத்தரவுகள் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என ஒய்வு பெ்றற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு அதனை செயல்படுத்தினார்.

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்படும் அறிக்கைகள் மற்றும் செய்திகள் அனைத்தும் தமிழில் தான். ஆனால் திருச்சியில் அந்த உத்தரவு இல்லை. குறிப்பாக தடுப்பூசி போடப்படும் இடங்கள் பற்றிய விபரங்கள் தமிழில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்படுவதில்லை.

மாநகராட்சி பகுதி என்றால் நகர சுகாதார அலுவலரும், மாவட்ட அளவிலான விபரங்கள் என்றால் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரும் பொறுப்பு அதிகாரிகள். மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் இருந்து வரும் தடுப்பூசி போடப்படும் விபரங்கள் தமிழில் தான் வருகின்றன. மாவட்ட அளவிலான தடுப்பூசி விபரங்கள் மாதகணக்கில் ஆங்கிலத்தில் தான் வருகின்றன.

இந்த விபரங்கள் அனைத்தும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வழியாக தான் பத்திரிக்கைகளுக்கு அனுப்படுகின்றன என்பது தான் வேதனை.. அதேபோல் திருச்சி மாவட்டத்தில் மழை அளவு பற்றிய விபரமும் ஆண்டு ஆண்டுகாலமாக ஆங்கிலத்தில் தான்…  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது தமிழில் முயற்சி செய்வார்களா?  . 

LEAVE A REPLY