ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்..

123
Spread the love

ஏர்போர்ட் காம்பவுண்டில் போஸ்டர் வழக்கு: திருச்சி விமான நிலையத்தை சுற்றி உள்ள காம்பவுண்ட் சுவற்றில் ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் பிரசாத் என்பவர் தனது பாத்திரக்கடை விளம்பர போஸ்டரை ஒட்டியது தொடர்பாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக விமான நிலைய டைரக்டர் தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ஏர்போர்ட் போலீசார் பாத்திரக்கடை உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

ரயில்வே ஊழியர் துாக்கிட்டு தற்கொலை: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் சிங், திருச்சி ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக அவர் செந்தண்ணீர்புரம் குமரன் தெருவில் வாடகை வீட்டில் குடி இருந்து வந்துள்ளார். இவரின் மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்று விடவே, தனிமையில் இருந்த மனோஜ்குமார் சிங் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வீட்டின் உரிமையாளர் அருணகிரி கொடுத்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய பொன்மலை போலீசார் போஸ்ட் மார்ட்டத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலை செய்து கொண்டவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

குடிபோதையில் தகராறு செய்தவர் சிறையில்… திருச்சி பிராட்டியூர் தெற்கு தெருவை சேர்ந்த விஜய்(24) என்பவர் குடி போதையில் அப்பகுதியில் உள்ள மகேஸ்வரி(30) என்பவரின் வீட்டின் முன்பு நின்று கத்திக்கொண்டிருந்துள்ளார். இதனை மகேஸ்வரி தட்டி கேட்கவே, விஜய்க்கு ஆதரவாக வந்த கோபி, ஜெனி ஆகியோர் தாக்கி உள்ளனர். இது குறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விஜய் மற்றும் கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை எரித்தவருக்கு சிறை: திருச்சி அரியமங்கலம் உக்கரை பகுதியை சேர்ந்த வெங்கடேஷன்(27) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவகந்தன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குடி போதையில் சிவகந்தன் வெங்கடேஷனின் பல்சர் பைக்கை தீயிட்டு கொளுத்தி உள்ளார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவகந்தனை அரியமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY