தாயாரின் இறுதி சடங்கு..லலிதா ஜூவல்லரி கொள்ளையனுக்கு அனுமதி மறுப்பு

158
Spread the love

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனின் தாயார் உடல் நலக்குறைவால் நேற்றிரவு மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கூறி மணிகண்டன் தரப்பில் சிறை நிர்வாகத்திடம் “பரோல்” விடுமுறை கேட்கப்பட்டது.

ஆனால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு பரோல் விடுப்பு தர முடியாது எனக்கூறி சிறைத்துறை நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர். இந்த சூழலில் திருவாரூர் மணிகண்டனின் தாயார் இறுதி சடங்கு இன்று நடைபெற்று முடிந்தது. மணிகண்டன் நேற்றுதான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY