திருச்சியில் தவித்த உ.பி சன்னியாசி கருணை இல்லத்தில் ஒப்படைப்பு..

98
Spread the love

 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமா்தாஜ் என்கிற 67 வயதான சன்னியாசி, ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் வாசலில் பல நாட்களாக உணவின்றி தவித்துக் கொண்டிருந்தார். இதனை அறிந்த கண்டோன்மெண்ட் காவல்நிலைய தலைமை காவலர் துரைராஜன், சன்னியாசிக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளாா். இதனை தொடா்ந்து திருச்சி கிராப்பட்டியில் இயங்கும் கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். இயல்பு நிலை திரும்பி ரயில்கள் இயங்க ஆரம்பித்தவுடன் அவரின் சொந்த ஊருக்கே அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். காக்கிக்குள் கருணையும் இருக்கும் என்பதை இச்செயல் நிருபித்து உள்ளது.

LEAVE A REPLY