திருச்சி சாரதாஸில் ரெடிமேட் ஆடைகளை திருடிய பெண் கைது…

317
Spread the love

 தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருச்சியில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளிலும் விற்பனை களை கட்டி வருகிறது. திருச்சி ஜவுளி விற்பனையில் பிரதான இடத்தை பிடித்துள்ள திருச்சி என்எஸ்பி ரோடு சாரதாஸில் கூட்டம் எவ்வாறு இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. இந்த கூட்டத்தை பயன்படுத்தி, தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியை சேர்ந்த ஜீவிதா(39) என்பவர் ரெடிமேட் துணிகளை வாங்குவது போல் நடித்து அங்கிருந்த 3 பேண்ட், 4 சட்டை, 3 டி சர்ட்டுகளை தனது அங்கத்திற்குள் மறைத்து திருட முயன்றபோது அந்த காட்சியானது சிசிடிவிA day in India's largest textile showroom- Sarathas Trichy | Part 1 | Dad  and Daughter - YouTube காட்சியில் கண்காணிக்கப்பட்டது. இதனை கவனித்த சாரதாஸ் பணியாளர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து சாரதாஸ் மேலாளர் ரெங்கராஜ்(75) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் ஜீவிதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY