திருச்சி வாலிபருக்கு மிரட்டல்.. சாட்டை துரைமுருகன் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது..

536
Spread the love

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து, திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவர் விமர்சனம் செய்து டிவிட் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம்  திருச்சி கே.கே. நகரில் உள்ள வினோத்தின் கார் உதிரிபாகன சேவை நிறுவனத்திற்கு சென்ற யூடியூர் சாட்டை துரைமுருகன்,நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோர் வினோத்தை மிரட்டியதோடு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுமாறு வற்புறுத்தினர்..

இது தொடர்பாக வினோத் கொடுத்த புகாரின்பேரில் கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாட்டை முருகன். வினோத், சந்தோஷ் மற்றும் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி ஜிஎச்சில் கொரோனா சோதனைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.. . 

LEAVE A REPLY