இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து….

101
Spread the love

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே விமானம் மற்றும் ரெயில்களில் செல்லும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல, பிற மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் பயணிகளும் ரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெரும்பாலான ரயில்களின் இருக்கைகள் காலியாக செல்கின்றன. அதனை தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் உள்ள ரயில்களை நிறுத்த பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் (வ.எண்.02627/02628) வருகிற 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, மதுரை-சென்னை தேஜஸ் ரயில் ரத்து குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூரு வரை இயக்கப்படும் ரயில் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY