வாகன நெரிசலில் தத்தளித்த திருச்சி…. படங்கள்….

774
Spread the love

தமிழகத்தில் திங்கள் முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் ஊரங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலுடன் சாலைகள் காணப்பட்டன. குறிப்பாக பெரியகடைவீதி, கமான் வளைவு, காந்தி மார்க்கெட் பகுதி, வெல்லமண்டி

பகுதி மற்றும் மெயின்கார்டு கேட் பகுதிகளில் பொதுமக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. பல சாலைகளின் இருமருங்கிலும் இரு சக்கர வாகனங்கள் முறையாக பார்க்கிங் செய்யப்படாமல் இருந்ததால் சாலையின் பாதி வரை இருசக்கர வாகன நிறுத்தத்தால் கவரப்பட்டு இருந்தது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே தென்பட்டது. ஊரங்கினால் 15 நாட்களுக்கு ஏற்பட உள்ள மனித இடைவௌி, இன்று ஏற்பட்ட மனித நெரிசலிடம் தோற்றுப்போய்விடும் போல……

LEAVE A REPLY