திருச்சியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாப பலி

995
Spread the love

திருச்சி பாலக்கரை கீழ படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் வேல்முருகன் ( 10 ) 5ம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டிற்கு பக்கவாட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது சதீஷ்குமார் என்பவரின் வீட்டில் குடிநீருக்காக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஜெட் மின்மோட்டார் ஓடிக்கொண்டிருக்கும் போது வேல்முருகன் மோட்டார் மீது கையை வைத்துள்ளார். பின்னர் அண்சிறுவன் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது பற்றி தகவலறிந்து வந்து பாலக்கரை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY