கல்யாணம் ஆகல…. விரக்தியில் திருச்சி வாலிபர் தற்கொலை….

187
Spread the love

லாரி மோதி முதியவர் பலி:  திருச்சியில் நெம்பர் 1 டோல்கேட், ராஜீவ் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(67). இவர் இருசக்கர வாகனத்தில் திருவானைக்கோவில் டிரங்க் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி எந்தவித சிக்னலும் கொடுக்காமல் திரும்பி, இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து லாரி ஓட்டி வந்த கிராப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(40) என்பவர் மீது வடக்கு புலனாய்வு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ஸ்பீட் பிரேக் இடறி நடந்து சென்றவர் பலி: திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(53). இவர் வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள தில்லை பவன் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஸ்பீடு பிரேக்கில் கால் இடறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமணம் செய்து வைக்காத சோகத்தில் வாலிபர் தற்கொலை: திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(26). இவர் தனது தாய் விஜயலட்சுமியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க இரண்டு வருடமாக வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாத காரணத்தினால், மனமுடைந்த விக்னேஷ்வரன், குடிபோதையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது: திருச்சி வடக்குப்பட்டி பைபாஸ் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த முசிறி கீழசந்த பாளையம் சேர்ந்த மகாமுனி(35) என்பவரையும், எடத்தெரு ரைஸ் மண்டி அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த வரகனேரியை சேர்ந்த காமு என்கிற காமராஜ் என்கிற ஹரிஹரசுதன் என்பவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY