சர்வதேச போட்டி…. தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு..

61
Spread the love

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சர்வதேச அளவில் ஊரகஇளைஞர்களுக்கான தடகளம் மற்றும் கபடி உள் ளிட்ட பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சரவண குமார், வினோதினி ஆகியோர் பங்கேற்று 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றனர். கபடி போட்டியில் அருண், தீபன் ராஜ், விஜயகுமார் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். டேக்வாண்டோ கராத்தே போட்டியில் ஹரிஷ் ராகவேந்திரா, கேரம் போட்டியில் அர்ஜுன் தங்கப்பதக்கம் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற இந்த வீராங்கனை மற்றும் வீரர்கள் அனைவரும் நேற்று சென்னையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சிக்கு வந்தனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY