காந்தி மார்கெட் மாறாது.. வெல்லமண்டி நடராஜன் உருக்கத்துடன் உறுதி

227
Spread the love

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இன்று காந்தி மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்து வியாபாரிகளை சந்தித்து, தனது தொகுதியை சேர்ந்தவர்களிடமும், பிற தொகுதியை சேர்ந்த வியாபாரிகளிடத்திலும் இரட்டை இலைக்கு வாக்களிக்க சொல்லி கேட்டுக்கொண்டார். அப்போது வியாபாரிகளிடத்தில் அவர் பேசும் போது….. இந்த காந்தி மார்க்கெட்டிலேயே வாழ்ந்து வருபவன் நான். என் உயிர் இருக்கும் வரை

காந்தி மார்க்கெட் இடம் மாற அனுமதிக்க விடமாட்டேன் என உருக்கத்துடன் வாக்குறுதி அளித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்லின், பகுதி செயலாளர் சுரேஷ், வெல்லமண்டி ஜவர்கலால் நேரு, முத்துக்குமார் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

LEAVE A REPLY