எங்களுக்கு ஆண்கள் சிறையா? .. திருச்சி சிறையை முற்றுகையிட்ட திருநங்கைகள்..

490
Spread the love

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை, திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் சத்யா,  அபர்ணா ஆகியோர் பாலியில் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தியதாக லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

   

அவர்கள் இருவரையும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பெண் கிளைச்சிறையில் அடைப்பதற்கு போலீசார் அழைத்து வந்தனர். திருநங்கை சத்யாவை பெண்கள் கிளைச் சிறையிலும், திருநங்கை அபர் ணாவை ஆண்கள் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்ததாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட 30க்கும் மேற்பட்ட  திருநங்கைகள் நேற்று இரவு பெண்கள் கிளைச்சிறையை திடீரென முற் றுகையிட்டனர். திருநங்கையை ஆண்கள் சிறயைில் அடைத்தால் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார், திருநங்கை அபர்ணாவை முசிறி பெண்கள் சிறையில் அடைக்க அழைத்து சென்றதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

LEAVE A REPLY