பெண் போலீசை மிரட்டிய திருச்சி ஸ்கூல் செக்யூரிட்டி

1006
Spread the love

திருச்சி மாநகரில் முக்கியமான ரோட்டில் உள்ள பள்ளி அது. காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் அங்கு செல்லும் எந்த வாகனமும் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க முடியாது. இவ்வளவு ஏன் சில நேரங்களில் ஆம்புலன்சுகள் கூட சிக்கி தான் செல்லும். காலை மற்றும் மாலை என பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை அழைத்து செல்ல வரும் வாகனங்களையும் போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து காவலர்களும் எஸ்ஐக்களும் பணியில் இருப்பார்கள். இப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முன்பு போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார் எந்த பெண் காவலர். அப்போது பள்ளியின் வாசலில் இருபுறமும் இரும்பிலான பேரிகேட்டை கொண்டு வந்து வைத்தார் பள்ளியின் செக்கியூரிட்டி. உடனே போய் பெண் போலீஸ், சார் இந்த பேரிகேட்டை வைக்காதீங்க, இதை சாக்கா வைச்சுகிட்டு டூவீலர் காரங்க பக்கத்துல நிறுத்திட்டு போறாங்கனு சொல்ல, உடனே செக்கியூரிட்டி‘ மேடம் நாங்க கமிஷனர் கிட்ட சொல்லிட்டோமுனு’ சொல்லியிருக்கார். அதுல வேடிக்கை என்னான்னா அந்த செக்கியூரிட்டி கமிஷனர் பெயரோடு சொன்னது தான். செக்யூரிட்டியின் பதிலால் கோபமடைந்த பெண் போலீஸ், நேரடியாக பிரின்ஸ்பல் ரூமிற்கு சென்று ‘  சார் நான் என்ன சொன்னேன்? உடனே அந்த செக்யூரிட்டி, எங்க கமிஷனர் பெயரை சொல்லி மிரட்டுறார். நானும் லெட்டர் எழுதி கொடுங்க நீங்க எழுதி கொடுங்க கமிஷனர் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கட்டும்’  என பொறிந்து தள்ளி விட்டாராம். உடனே சம்மந்தப்பட்ட பள்ளியின் பிரின்ஸ்பல் பெண் போலீச சமாதானம் செஞ்சு அனுப்பியிருக்கிறார். உடனே பள்ளி முன்பக்க கேட்டில் இருந்த பேரிகேட்டை எடுக்கவும் சொல்லிட்டாராம்..  

LEAVE A REPLY