டிரம்ப்க்கு விருந்து.. எடப்பாடிக்கும் அழைப்பு

350

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவியுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டிரம்ப் விருந்தில் கலந்து கொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24 அல்லது 25-ந்தேதி டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

LEAVE A REPLY