கசமுசாவில் ஈடுபட்டார் டிரம்ப்.. பெண் பத்திரிக்கையாளர் புகார்

162
Spread the love

நியூயார்க்கை சேர்ந்த பெண் கட்டுரையாளர் ஒருவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நியூயார்க் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல பெண் கட்டுரையாளரான இ ஜீன் கர்ரோல் (75), நியூயார்க் பத்திரிக்கையில் எழுதி உள்ள கட்டுரையில், 1990 ம் ஆண்டு மத்தியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் உடை மாற்றும் அறைக்குள் ட்ரம்ப் அத்துமீறி நுழைந்து, தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் பற்றிய இது போன்ற பல விஷயங்களை விரைவில் தான் வெளியிட உள்ள “hideous men” என்ற புத்தகத்தில் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், இ ஜீன் கர்ரோல் என்பவரை தனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இது தவறான தகவல். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் டிரம்ப்பின் மறுப்பிற்கு இ ஜீன் கர்ரோல் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. 2016 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதும், 12 க்கும் மேற்பட்ட பெண்கள், டிரம்ப் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறினர். அப்போதும் அவற்றை மறுத்த டிரம்ப், அவர்கள் பொய் சொல்வதாக கூறினார்.

LEAVE A REPLY