காடுவெட்டி குருவின் மகனை கொல்ல முயற்சி.. பாமக மீது புகார்

788
Spread the love

முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக குருவின் உறவினர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு வந்திருந்தனர். நேற்றிரவு குருவின் மகன் கனலரசனின் பேசிக்கொண்டிருந்த அவரது நண்பர் அருண்குமார் தூ்ங்குவதற்காக அருகில் உள்ள தனது வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை, அவரது தம்பி காமராஜ். உறவினர்கள் மணிவேல். சதீஷ் ஆகியோர் அருண்குமாரை தாக்கி டூவீலரை பிடுங்கிக்கொண்டு கனலரசனை அழைத்து வருமாறு கூறி அடித்து விரட்டியுள்ளனர்.

அப்போது அருண்குமார் சத்தம் போட்டுக்கொண்டு கனலரசன் வீட்டிற்கு ஓடி வர அங்கிருந்த குருவின் மகன் கனலரசன் மற்றும் அவரது மருமகன் மனோஜ், அவரது சகோதரர் மதன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியில் ஓடி வர பின்னால் வந்து கொண்டிருந்த சின்னப்பிள்ளை மற்றும் காமராஜ் ஆகியோர் அரிவாளால் வெட்ட ஆரம்பித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட மனோஜ் மற்றும் மதன் ஆகியோர் கனலரசனை கட்டிப்பிடித்துக்கொள்ள அவர்கள் இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும், ஊர் மக்களும் சத்தம் போட்டுக்கொண்டு ஓடி வந்துள்ளனர்.

 

 

 

இதனால் பயந்து போன சின்னப்பிள்ளை, காமராஜ் உள்ளிட்ட கும்பல் அரிவாளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக குருவின் மகன் கனலரசன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.  படுகாயமடைந்த மனோஜ், மதன் மற்றும் கனல் ஆகியோர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு டாகடர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தான் காரணம் என்று குருவின் தாயார் கல்யாணி குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY