திருச்சி அருகே ஒருவர் கொலை.. தந்தை, மகன்கள் கைது

354
Spread the love

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டியில் வசித்து வருபவர்கள் ஜேம்ஸ், அவரது மகன் ஜெயபால். இவர்களது வீட்டின் அருகில் குடியிருந்து வருபவர் ஆரோக்கிரசாமி. இரு குடும்பத்தினர் இடையே அங்குள்ள புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவது குறித்த தகறாறு இருந்து வந்தது. நேற்று மாலை இரு குடும்பத்தினர் இடையே தகறாறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஆரோக்கியசாமி மற்றும் அவரது மகன்கன்கள்  அரிவாளால் வெட்டியதில் ஜேம்ஸ் மற்றும் ஜெயபால் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஜெயபால் இ றந்தார். ஜேம்ஸ் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கியசாமி மற்றும் அவரது மகன் ரவிரோம சார்லஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

LEAVE A REPLY