மக்கள் பேட்டியை போடுங்கள்… டிடிவி உருக்கம் வீடியோ

232
Spread the love

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதி்க்கப்பட்டுள்ளன. அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று மக்கள் மறியல், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அன்றாட நிகழ்வாகி விட்டது.

இந்நிலையில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பேட்டியளித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செய்தியாளர்கள் வருவதில்லை. இதனால் எங்களுடைய பாதிப்பு அரசுக்கு, வெளியுலகுக்கு தெரியாமல் இருக்கிறது.இந்த காரணத்தால் நாங்கள் நிவாரணம் பெற முடியவில்லை. எனவே பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒதுக்குப்புறங்களில் பாதிக்கப்பட்ட சிறிய கிராமங்களுக்கு வரவேண்டும் என்று தன்னிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். மேலும் எங்களைப் போன்றவர்களின் பேட்டியை போடாவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் அப்பகுதிகளுக்கு சென்று மக்கள் பேட்டியை போடுங்கள் என்று டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY