பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி

312
Spread the love

‘வம்சம்’, தேவதை, இளவரசி, பாவ மன்னிப்பு உள்ளிட்ட சில டிவி தொடர்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. சின்னத்திரையில் நடன இயக்குனராகவும் உள்ளார். ‘கல்யாணப் பரிசு’ உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர் ரகுநாத். ஏற்கெனவே மணவாழ்க்கை முறிந்த நிலையில், 8 வயதுப் பெண் குழந்தையுடன் இருக்கும் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், ”ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். தன்னை வரதட்சணை கேட்டு என்னை அடித்தார் ” என ஜெயஸ்ரீ புகார் அளித்தார். இதனை அடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று கூடுவாஞ்சேரியில் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த ஜெயஸ்ரீ உடல்நலம் சரியில்லை என்று கூற, நண்பர்கள் அவரை வீட்டுக்குச் செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால், அவர் தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று அங்கு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு நீலாங்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயஸ்ரீயின் தாயார் அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY