Spread the love

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் நேற்று மாலை அரை மணி நேரம் தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. எதிர்மார்க்கத்தில் இயக்கப்படும் செங்கோட்டை-மதுரை ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலத்திற்கு  புறப்பட்டது. இரு ரயில்களும் ஒரே நேரத்தில் எதிரெதிரே ஒரே தண்டவாளத்தில் இயங்குவதை  அதிகாரிகள் அறிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு 2 ரயில்களையும் நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

Related image

இதையடுத்து 2 ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் 2 ரயில்களில் வந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர். பின் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளிக்குடியில் இருந்த நிலைய அதிகாரி தீப்சிங் மீனா இந்தியில் தகவலை கூறியது தெரிய வந்தது. அவரது தகவலை தண்டவாளத்தில் இருந்த ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மொழிப் பிரச்னையால் ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்களும் பெரும் விபத்துக்குள்ளாக நேர்ந்திருக்கும். இச்சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீம்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயகுமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY